• Thu. Mar 28th, 2024

கர்ப்பிணி பூனையை காப்பாற்றிய இந்தியர்கள் உட்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஷேக் முகமது 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.

By

Aug 30, 2021 ,

துபாயில் உள்ள டெய்ரா என்னும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. இந்த பூனை கீழே விழுந்து விடும் என முன்கூட்டியே அறிந்த நான்கு பேர், உடனடியாக அந்த பூனையை காப்பாற்றும் விதமாக போர்வையை விரித்து, அதன் பின் பூனையை கீழே விழச் செய்தனர்.
இதனையடுத்து அந்த பூனை பத்திரமாக தரையில் விடப்பட்டது. மேலும், அந்தப் பூனை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வைரலாகியுள்ளது. காப்பாற்றியவர்கள் கேரளாவைச் சேர்ந்த நாசர் ஷிகாப், முகமது ரஷீத், பாகிஸ்தானை சேர்ந்த அடிப் மெஹ்மூத், மொராக்கோவைச் சேர்ந்த அஷ்ரப் என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த வீடியோவை துபாய் மன்னர் ஷேக் முகமது அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இளைஞர்களை பாராட்டியுள்ளதுடன், அவர்களை அடையாளம் கண்டுபிடித்து 50,000 திர்ஹாம் அதாவது 10 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்து அவர்களை பாராட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *