• Mon. Jun 24th, 2024

தமிழர் நாடார் குலமங்கை தமிழிசையை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமானப்படுத்தியதற்கு கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கண்டனம்

இரு மாநில ஆளுநராக இருந்த தமிழிசையை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் அரசு விழாவில் பொது மேடையில் அவமதித்த மத்திய உள்துறை அமைச்சரின் செயலுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் கண்டனம் தெரிவித்து, நாடார் இனத்தை அவமதித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார் மார்தாண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ராஜேஷ்குமார்..,

மாநில கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் நடக்கும் அரசு நீடிப்பது கடினம் தமிழகத்தில் பாஜக வின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது வடதமிழகத்தில் பாமக-வின் தயவால் தான் வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளது. இது பாஜகவின் தனிபட்ட செல்வாக்கு கிடையாது. தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் இப்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். அவர்கள் எங்களுக்காக கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் உழைப்பால் மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. வரும் காலத்தில் திமுக கூட்டணி தொடரும் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. பெண்களுக்கு தனி மதிப்பு அளிக்கும் கட்சி பொது மேடை அரசு விழாவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் பொது விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசையை மத்திய உள் துறை அமைச்சர் அமிர்ஷா கை சூண்டி பேசி தமிழ் பெண்மணியை அவமதித்தது கண்டிக்கதக்கது. பெண்களை பாதுகாக்கும் கட்சி என கூறி விட்டு, நாடார் இனத்திற்கு இது அவமானம் ஏற்படுத்தும் செயல்.

அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது பல தொகுதிகளில் டெப்பாசிட் இழந்து உள்ளனர். அண்ணாமலை கூறுவது போல, தமிழகத்தில் பாஜக வளர்ந்து இருந்தால் ஒரு தொகுதில் கூட வெற்றி பெறாதது ஏன் மக்கள் மன்றத்தில் நிறுபித்தால் மட்டுமே ஒரு கட்சி பலமானதா, பலவீனமானது என்பது தெரியும் விவேகானந்த மண்டபத்தில் தியானம் செய்ய மோடிக்கு அருகதை இல்லை விவேகானந்தர் போதனைக்கும் இவருக்கும் எந்த கொள்கையும் கிடையாது. பிரதமர் அனைவருக்கும் ஆனவர். ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் என்று தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தாரகைகத்பட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *