• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சைல்டுலைன் 1098 சார்பில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் நண்பன் வார விழா

சிவகங்கை மாவட்டம் சைல்டுலைன் 1098 சார்பில் நவம்பர் 14 முதல் 19 வரை குழந்தைகள் நண்பன் வார விழா கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக அரளிகோட்டை ஊராட்சியில் சிறப்பு திறந்த வெளி பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சைல்டுலைன் உறுப்பினர் மலைக்கண்ணண் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்றத்தலைவி புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாபு அவர்கள் சைல்டுலைன் 1098 பற்றி எடுத்துறைத்தார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் மஹாலெட்சுமி அவர்கள் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தார்கள். ஜூலியட் வனிதா பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார்கள். மேலும் கிராம நிர்வாக அலுவலர்,பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கிராம செவிலியர்கள், ஊராட்சிமன்றத் துணைத் தலைவி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சைல்டு லைன் உறுப்பினர்கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார்கள் இக்கூட்டத்தை சைல்டு லைன் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.