• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘நகை, பணத்தோட என் மகளை கடத்திட்டாங்க’.. கதறும் தந்தை!

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் வயல் தெருவில் வசித்து வரும் மனோகர் என்பவர் தனது மகளைக் காணவில்லை என நாகர்கோவில் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தான் கோட்டார் வயல் தெருவில் வசித்து வருவதாகவும், எனது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்ததால், தற்போது நானும் எனது மகளும் வயல் தெருவில் வசித்து வந்த நிலையில் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட சமயத்தில், எனது உறவினரான  சாரதா என்பவரது வீட்டில் மகளை தங்க வைப்பது வழக்கம். இதேபோல் கடந்த 7ஆம் தேதி தனது சித்தி வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால், எனது சித்தி தொலைபேசி வாயிலாக கேட்டபோது அங்கு எனது மகள் வரவில்லை என்று தகவல் தெரிவித்தார். உடனே நான் ஊருக்கு வந்து பல இடங்களில் தேடிப் பார்த்தபோது எனது மகளை கடத்தப்பட்டிருப்பதும் மேலும் வீட்டில் இருந்த 17 அரை புவன் தங்க நகை மற்றும் ரூ.7,000 ரொக்கத்தையும எடுத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தொடர்ந்து நேசமணி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரித்த போது மகளை கோட்டார் வயல் தெரு பகுதியை சேர்ந்த அருள் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து பணத்திற்காக கடத்தி சென்றதாக தெரிவித்தார். தங்கள் மகளை மீட்டு தருமாறும், வீட்டில் இருந்த நகை பணத்தை மீட்டுத் தருமாறு நாகர்கோவில் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.