பிரசாந்த் நீல் இயக்கத்தில் யா ஷ் – ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து 2018ல் வெளியான படம், கேஜிஎப். கன்னடத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கேஜிஎப் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..
கே.ஜி.எப் 2 படத்தினை ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இந்த படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது இந்நிலையில், சுல்தானா என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது.