• Sat. Mar 22nd, 2025

கேரள மாநிலம் பத்தனம்தட்டா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பயிற்சி பட்டறை.

கேரள மாநிலம் பத்தனாம்தட்ட மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் (KJU) பயிற்சி பட்டறை கன்னியாகுமரி ஒய் எம் சி எ அரங்கில் இரண்டு நாட்கள் (ஜனவரி-26,27) தேதிகளில் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வை(ஜனவரி_27)ம் நாள் பொது அரங்கை கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்விற்கு தலைமை தாங்கிய KJU அமைப்பின் தலைவர் ராஜூ கட்டகராப்பள்ளி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை வரவேற்று பேசும் போது,

எங்களின் பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆண்டுக்கு ஒரு முறை, கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா இடங்களில் எங்களின் சங்கம நிகழ்ச்சியை நடத்துவோம், இந்த முறை 1956-க்கு முன் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான கன்னியாகுமரி இப்போது தமிழகத்துடன் இருந்தாலும், இன்றும் கன்னியாகுமரி எங்களின் “தாய்வீடு” என்ற மன உணர்வில் இவ்வாண்டு நிகழ்வில் பங்கேற்கிறோம் என தெரிவித்து, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர்.

விஜய் வசந்த் கேரள பத்திரிகையாளர்கள் முன் உரையாற்றும் இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்தவர். எனது நாடாளுமன்ற சக கேரள மாநிலத்தின் பத்தனாதட்டா தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஆன்றோ அந்தோணிக்கு கன்னியாகுமரி தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் மத்தியில் நானும் ஒரு ஊடகவியலாளன் என்ற பெருமையுடன் பேசுவது அதிக மகிழ்ச்சியை தருகிறது. பத்திரிகை பணி என்பது கால நேரம் பார்க்காது பார்க்கிற பணியில் இன்றைக்கு பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நம் நாட்டில் பல பாரம் பரிய பத்திரிகைகள் செய்தியின் உண்மை தன்மையை உணர்ந்து செய்திகள் வெளியிட்டு. பத்திரிகை வாசகர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தும் நிலையில்.சில பத்திரிகைகள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பான சூழலை ஏற்படுத்துவதை வாடிக்கௌயாக கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் அதிக விழிப்புணர்வும்,100சதவீதம் எழுத்தறிவு பெற்ற கேரள மாநிலம் அதை போன்ற குமரி மாவட்ட மக்களும் போலியான செய்திகளை ஒரு பர பரப்பிற்காகவே வெளியிடும் பத்திரிகைகளை அடையாளம் காணும் ஆற்றல் பெற்றவர்கள் என விஜய் வசந்த் தெரிவித்தார்.