• Thu. Mar 27th, 2025

காமராஜரின் மனசாட்சியின் ஆட்சி அல்ல இன்றைய ஆட்சியாளர்களின் ஆட்சி…..!?


கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலைவழக்கில் குற்றவாளிகள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் கைது செய்யாமல் காவல்துறையினர் தாமதம்,குற்றவாளியை கண்டுபிடிக்க காட்டாத அவசரத்தை உடலை அடக்கம் செய்வதில் காவல்துறையினர் காட்டியது ஏன்? சீமான் குற்றசாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு தூய மிக்கேல் அதிதூரர் ஆலய வளாக பங்கு தந்தை இல்லத்தில் பங்குதந்தை ராபின்சன் மன்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் ஆவரது கூட்டாளிகளால் கடத்த 20ஆம் தேதி படுகொலை செய்யபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர் குமாரின் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று உயிரிழந்த சேவியர் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து சேவியர் குமாரின் உடல் நல்லடக்கம் செய்யபட்ட பகுதியிலும் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்தி அவரது கல்லறையில் நாம் தமிழர் கட்சி கொடி போர்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இதையடுத்து செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், சேவியர் குமார் தன்னை விடவும் கட்சியில் சிறப்பாக இயங்க கூடியவர் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டவர் தப்பு நடக்கும்போது தட்டி கேட்பதற்காக தான் தான் அரசியலுக்கு வந்ததாகவும் தவறு நடக்கும் போது தட்டி கேட்டால் சகித்து கொண்டு செல்வதில் தான் அடிமைதனம் பிறக்கிறது. சேவியர்குமார் தவறு ஏதாவது செய்திருந்தால் வழக்கு தொடுக்கலாம். அதை விடுத்து பேச்சுவார்த்தை என்று அழைத்து கொலைசெய்தது. திட்டமிட்ட படுகொலை நாம் தமிழர் கட்சி யென்று பாராமல் அரசு பணியிலிருந்து ஒரு சாதாரண மனிதன் என்று நினைத்தாவது தமிழக அரசு நிவாரணம் அறிவித்திருக்கவேண்டும் வெளிப்படையாக கொலையென தெரிந்தும் அதற்கு விசாரணை காரணம் காட்டி குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் கால்ம் தாழ்த்துவது ஏன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால் குற்றவாளிகளை பாதுகாக்க தமிழக அரசு முயல்வதாகவும், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொலைவழக்கில் குற்றவாளிகள் திமுக கட்சியை சேர்த்தவர் இல்லாததால் உடனடியாக குற்றவாளி கைது செய்யபட்டு தண்டனையளிக்கபட்டது.

நேர்மையானவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
ஆலயத்தில் சேவியர் குமாரின் குடும்பத்தை ஆலய உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டபின் எதற்காக ஆலயத்திற்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும். எதற்காக பேச்சுவார்த்தையென ஆலயத்திலேயே அழைக்க வேண்டும். அதிலேயே சந்தேகம் எழுவதாகவும் சேவியர்குமாரின் ஆசையே அவரை கட்சியின் புலிக்கொடி போர்த்தி அடக்க வேண்டுமென்பது, ஆனால் அது நிறைவேறாமல் போனது காவல்துறையினர் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்து பாதுகாப்பு அளிப்பதை விடுத்து உடலை அடக்கம் செய்வது தான் காவல்துறையினர் வேலையா
குற்றவாளியை கண்டுபிடிக்க காட்டாத அவசரத்தை காவல்துறையினர் உடலை அடக்கம் செய்வதில் காட்டுவது ஏன் மற்றவர்களுக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால் சீமான் வரவேண்டும். ஆனால் சீமான் கட்சியை சார்ந்தவருக்கு பிரச்சினையென்றால் ஒருவரும் வாய் திறக்கமாட்டார்களா பத்துலட்சரூபாய் இடைகால நிவாரணம் வழக்குவது என்ன பிச்சையா அதை நாங்கள் வழங்கமாட்டாமா.? நாம் தமிழர் கட்சியினர் தலா 1000ரூபாயு வீதம் கொடுத்தாலே ஒரு கோடி ரூபாய் கொடுக்கமுடியும் சேவியர் குமார் ஒரு உயிர் அல்ல பல கோடி தமிழ் மக்களின் உணர்வு என்பதை புரிந்து கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள். என் தாத்தா காமராஜர் முதல்வராக இருந்த போது அவரது தங்கை மகன் ஒரு வழக்கில் ஆட்பட்டபோது., தங்கை மகனாக இருந்தும் ஒரு குற்றவாளியை கைது செய்யுங்கள் என உத்தரவிட்டார். காமராஜர் போன்ற மனசாட்சி மனிதனின் நேர்மையான அணுகு முறையை இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர் பார்க்க முடியுமா.? என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.