• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மனித மாமிசம் சாப்பிட்ட கேரள தம்பதிகள்

ByA.Tamilselvan

Oct 12, 2022

கேரளாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் அவர்களது மாமிசத்தை பச்சையாக உண்டதாக கைது செய்யப்பட்ட லைலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின். இவருக்கு 50 வயதாகிறது. இவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்த பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பதை பதைக்கும் தகவல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். செப்டம்பர் மாதம் மாயமான பெண் ரோஸ்லினை நரபலி கொடுத்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை அந்த மூவரும் தெரிவித்தனர். மேலும் ஏற்கெனவே ஜூன் மாதம் பத்மா என்ற பெண்ணையும் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் டாக்டர் தம்பதிக்கு குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆசைப்பட்டனராம். பணக்காரர்களாக நரபலி கொடுத்தால் தான் என முகமது ஷபி ஐடியா கொடுத்துள்ளார். இதை நம்பிய டாக்டர் தம்பதி உடனடியாக அதற்கான ஆட்களை அழைத்து வருமாறு முகமது ஷபியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் லைலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் அவர்கள் வீட்டில் ஒரு அறையில் வைத்திருந்தனர். நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல் மாமிசத்தை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம் என முகமது ஷபி கூறினாராம்.
இதையும் நம்பிய டாக்டர் தம்பதி ரோஸ்லினின் விலா எலும்பு பகுதியை சாப்பிட்டனராம். மேலும் இருவரை பலி கொடுத்ததற்காக லைலா மனம் வருந்தவே இல்லையாம். நரபலி கொடுத்தால் பணக்காரர்கள் ஆகலாம் என லைலா இன்னமும் நம்பி கொண்டிருக்கிறாராம். இச்சம்பவம் கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.