இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவுற்றதை தொடர்ந்து சிறைக்கு சென்றார்.
சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மௌனமாக அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.