இன்றைய தினம் டெல்லி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது, இறுதி கட்டத்தை வாக்கு எண்ணிக்கை எட்டிக் கொண்டிருக்கிறது, 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1998 பிறகு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. டெல்லியில் 2015ல் பத்து,12 வயது இருக்கிற குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு கையில் விளக்கு மாத்தோடு இருப்பார்கள். ஆனால் இந்த முறை நான் டெல்லி சென்ற பொழுது, அது அங்கு தென்படவில்லை. நான் டெல்லியில் இருந்து மதுரை திரும்பி உடன் பத்திரிகையாளர்களிடம் கூறிய, தலைநகரில் தாமரையின் ஆட்சி வருகிறது என்று கூறினேன். 2015-ல்-ஆமா நீ எழுவதற்கு 65 சீட்டுகள் வாங்கி இருந்தனர், ஆனால் பாஜகவோ மூன்று சீட்டுகளை மட்டுமே பெற்றது. ஆனால் இந்த முறை 48 வாங்கி இருக்கிறது.. இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால், பிரதமர் மோடி அரசாங்கத்தின் திட்டங்கள், மக்கள் இதயத்தை தொட்டிருக்கிறது. இரண்டாவது ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு Thug போன்றவர், இந்த வார்த்தைக்கு நான் முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொண்டு கூறுகிறேன், அவரங்கு லோக்கல் Thug போன்று ஆட்சி செய்து கொண்டிருந்தார். யமுனா நதியில் விஷத்தை கலந்து விட்டது ஹரியானா அரசாங்கம். டெல்லியில் இருக்கும் மக்களை இன படுகொலை செய்வதற்காக, genocide என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதை மக்கள் ரசிக்கவில்லை , ஏனென்றால் முதலில் ஆம் ஆத்மி கட்சி என்றால் தொப்பி,மப்ளர், ஹவாய் செருப்பு என்றுதான் இருந்தது. இது இதுதான் கெஜரிவாலுக்கு தோற்றம் கொடுத்தது. ஆனால் இன்றைய அளவில் கெஜ்ரிவால் உடைய பாத்ரூம், டாய்லெட் pad தங்க plate ஆல் செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சாராய ஊழல் நிரூபிக்கப்பட்டது. அவர் செய்த சாராய ஊழல் பற்றி கம்பளைண்ட் கொடுத்ததே காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சி கொடுத்த புகாரின் மீது அந்தந்த துறையை சார்ந்தவர்கள், எடுத்த நடவடிக்கைதான். இதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல ஜீரோ எம்.எல்.ஏ வில் ஹட்ரிக் வாங்கிய ராகுல் காந்திக்கும் காங்கிரஸ்க்கும் மனமார்ந்த வாழ்த்து சொல்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு காங்கிரஸ் டெல்லியில் துடைத்தெறியப்பட்டுள்ளது, ராகுல் காந்தி பார்லிமென்டில் பேசுகிறார், நான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மட்டும் எதிர்க்கவில்லை, நான் இந்தியன் ஸ்டாட்டை எதிர்க்கிறேன் என்று கூறினார். அந்த அளவுக்கு முழுமையான தேசத்துரோகியாக மாறிப்போன, காங்கிரஸ் இன்றைக்கு டெல்லியில் துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. மூன்றாவது முறையா ஜீரோ எம்எல்ஏ ஆட்சி வாங்கி இருக்கிற தலைவர் தான் ராகுல், பிரியங்கா வாட்ரா கம்பெனி என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்திருக்கிறது. ஒரு அரசியல் தலைவர் இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு பெரிய உதாரணமாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஏனென்றால் பக்கத்து மாநிலத்தையே விஷம் கலந்து விட்டார்கள் என்று கூறினார். இதையெல்லாம் தெரிந்து கொண்ட டெல்லி மக்கள் ஒரு திடமான முடிவை எடுத்திருக்கிறார்கள். பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக டெல்லி வாக்காளர் பெருமக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் பாலம் தொகுதியில் தமிழர் என்கேவ் என்ற ஒரு பகுதியே உள்ளது. அங்கு நானும் மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரு பெரிய எழுச்சியையே கண்டோம். அங்கிருந்த மக்கள் நாங்கள் தாமரைக்கு மட்டும்தான் ஓட்டு போடுவோம் எனக் கூறினார்கள். அவர்களெல்லாம் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்ததை கண்ணால் பார்க்க முடிந்தது. 1998 பிப்ரவரி 14 எல்.கே அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்த பொழுது, அவரை தாக்குவதற்காக 13 இடங்களில் சீரியல் பாம்கள் வைக்கப்பட்டன. அதில் 59 பேர் இறந்து போனார்கள் 200க்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அன்றைய தினம் ரத்தம் சதை ஆறாக ஓடிக்கொண்டிருந்ததை என் கண்களால் பார்த்தேன். அந்தக் கோரமான பயங்கரவாத சம்பவத்தை எதிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும், அது இந்த முறை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு,
எப்பொழுதுமே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுகிறது,2009-10 ல் தான் திருமங்கலம் ஃபார்முலா என்பதை இந்த திராவிட மாடல் கட்சி அறிமுகப்படுத்தியது. 2010 பத்தில் நடைபெற்ற 5 தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. ஆனால் 2011 பொதுத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக பிரதான கட்சிகள் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை என்று கூறிய பிறகும், மக்களை பட்டியில் அடைத்து வைத்து காசு கொடுப்பதெல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பண கொழுப்பை காட்டுகிறது. அப்படி இருந்தும் கூட 1:6 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு போயிருக்கிறது. இது திமுகவிற்கு அடக்கப்பட்ட வெற்றி என்றுதான் கூற வேண்டும். 2026ல் என்ன நடக்கும் என்பதை மக்கள் தற்போது கோடிட்டு காட்டி இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை புறம் தள்ளி வைத்துவிட்டு ஒன்று சேர வேண்டும் என்பதை இந்த டெல்லி முடிவுகள் காட்டுகிறதாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
இந்தியா கூட்டணியில் இருக்கிற எல்லா கூட்டணியின் மீதும் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்பதை எனக்கு கிடைத்த தகவல். விசிக என்றாலே விழுப்புரம் சிதம்பரம் கட்சி, அதைத் தவிர அங்கு சொல்வதற்கு ஒன்றுமில்லையே..
இவர் தமிழ்நாட்டை ஜாதி ரீதியாக பிளந்து மக்களை நாசப்படுத்திக் கொண்டிருக்கிற கட்சியில் வீசிகாவும் ஒன்று என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், திமுகவின் பெரிய தோல்வியை மறைப்பதற்காக, அதாவது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஏதாவது இருக்கிறதா, முதலில் எல்லாம் ஏதாவது ஒரு சம்பவம் எங்காவது நடக்கும், ஆனால் இன்று ஒரு நாளில் ஆறு ஏழு சம்பவங்கள் நடக்கிறது. மானாமதுரையில் பள்ளியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், மணப்பாறை பள்ளியில் பெண்பிள்ளை பாலியல் வன்கொடுமை, சென்னையில் மயிலாப்பூரில் போலீஸ் பூத்துல வச்சு 13 வயசு பொண்ணு காவல் துறையில் இருக்கக்கூடியவர் கற்பழித்த செய்தி, தமிழ்நாட்டிலே பெண்கள், பெண் பிள்ளைகள் வீதியிலே நடமாட முடியாத ஒரு சூழ்நிலையை இந்த தீய திராவிட ஸ்டாக் அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் மறைப்பதற்காக ஏதாவது பொய்யை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டிருப்பார்கள். முதலமைச்சர் காவல்துறைக்கு தானே மந்திரியாக இருக்கிறார், காவல்துறையில் ஏடிஜிபி கல்பனா நாயக் , டிஜிபிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார், சீஃப் செகரட்டரி இடம் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார், ஹோம் செகரட்டரிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். சீருடை பணியாளர் தேர்விலே முறைகேடு நடக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டியதால், என்னை நெருப்பு வைத்து கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கிறது, நான் சற்று முன்னதாக அலுவலகத்திற்கு வந்திருந்தால் என்னுடைய உறவினர்கள் என்னுடைய முகத்தை கூட பார்த்திருக்க முடியாது என்று அந்த புகாரியில் கூறியிருக்கிறார், இதைவிட ஸ்டாலினுக்கு அவமானம் வேறு ஏதாவது உண்டா? இதே ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்தப் பதவி வேண்டாம் கையால் ஆகாத நபராக நான் இருக்க விரும்பவில்லை என்று ராஜினாமா செய்துவிட்டு சென்றிருப்பேன். இப்படி இருக்கையில் நீங்கள் எல்லாம் மத்திய சர்க்காரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. ஒரு துறைக்கு மட்டும், ரயில்வே துறைக்கு 6680 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று பொய் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆட்சி அமையும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு,
கட்சிகளோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்வது மட்டும்தான் என்னுடைய வேலை, அதனால் கூட்டணி கட்சிகளைப் பற்றி நான் எப்பொழுதும் கூற மாட்டேன் எனக் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள், பாஜக போன்ற கட்சிகள் தான் கலவரத்தை உண்டாக்கினார்கள் என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
அங்கு மேல் தர்கா இருக்கிறது என்று சொல்கிறார்கள் நான் அதுவே இல்லை என்று கூறுகிறேன், காரணம், தமிழ்நாடு சுற்றுலா துறையின் சிற்றேடில் , சிக்கந்தர் பாதுஷாவின் கல்லறை கோரிப்பாளையம் இதில் உள்ள மசூதிக்குள் இருக்கிறது என்று திமுக அரசாங்கம் கொடுத்திருக்கும் சிற்றேட்டில் உள்ளது. அப்படியானால் திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா எப்படி இருக்கும். இரண்டாவது, சிக்கந்தர் எப்படி கொல்லப்பட்டார்? குமாரகம்பனன் என்ற விஜய நகர பேரரசு மன்னன் படை எடுத்து வந்து 24 மணி நேரத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஒன்றுமில்லாமல் செய்தார். அப்போது உயிருக்கு பயந்து மலை மீது ஏறிய சிக்கந்தரை மேலே ஏறிச் சென்று குமாரகம்பணன் தான் வதம் செய்தார்.. இதை எச் ராஜாவாகிய நான் சொல்ல வேண்டாம், காவல் கோட்டம் , எம். பி சு வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தில் அவரே கூறி இருக்கிறார். மயக்க மன்னர்கள் கிட்டத்தட்ட சிக்கந்தர் பாதுஷாவிற்கு பிறகு 300 400 வருடங்கள் அவர்கள்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது கந்தர் மலையில் ஏறி தர்கா கட்டி இருக்க முடியுமா? . ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடம், தெரியாது அது வசந்த மண்டபமாக இருந்ததா என்றெல்லாம் தெரியாது அதை தான் பிற்காலத்தில் இவர்கள் தர்கா என்று கூறினார்கள்.. இதெல்லாம் ஏற்கனவே இருக்கிற இலக்கியம். 1915-16 ல் தர்காவின் நிர்வாகத்தில் இருக்கக்கூடியவர்கள், தர்காவை விசித்திரப்படுத்துவதற்கு கீழ் இருந்த கல்லை , அதாவது அந்த மலையின் கீழ் இருந்த கல்லை வெட்டி எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த கட்டிடம் மீனாட்சி அம்மன் கோவில் உடைய நிர்வாகி தான் திருப்பரங்குன்றம் கோவிலை நிர்வாகம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து இருக்கிறார்கள். அன்று 1915ல் இருந்த பிரிட்டிஷ் கலெக்டர்,பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்று அரசாங்கத்திற்கு கூறியிருக்கிறார். அதனால் அது மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகிறது. அப்பொழுது அங்கு தீர்ப்பானது மலையைச் சுற்றி இருக்கும் இடம் எல்லாம் அந்த கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வருகிறது. ஆனால் அங்கிருக்கும் தர்காவை இருக்கிறபடியே பராமரிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பு கூறியிருக்கிறது. அப்பொழுது உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது, இரு தரப்பும் பேசி முடிவெடுங்கள் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்பொழுது இந்த வழக்கு லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு வருகிறது, நாங்கள் மாவட்ட நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை செல்லும் என்று கூறுகிறோம் என்று கூறிவிட்டனர். அப்படி இருக்கையில், இப்பொழுதெல்லாம் என்ன சொல்லிக் கொள்கிறார்கள் மாமன் மச்சானாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், ஆனால் கோயம்புத்தூரில் 13 இடங்களில் முஸ்லிம் மதவெறி அமைப்பு குண்டு வெடிப்பு நடத்தியது. இந்த சமூகம் கூட கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது தான் நடந்தது. அந்த சம்பவத்திற்கு கருணாநிதி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் ஐ ஆக்டோபஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதோடு அந்த மலையில் விரிவுபடுத்தும் பணிகளோடு நின்றார்களா, அங்கு மழை மீது கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதித்தார்கள்.. இதனால் அரசாங்கம் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடும் எனக் கருதி, 1994 சென்னை உயர்நீதிமன்றம் மலையின் மேல் தீபம் ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியும், இன்றைய தினம் வரை 31 வருடங்கள் ஆவியும் தமிழக அரசு நிர்வாகம் அங்கு அனுமதி வழங்கவில்லை. இப்பொழுது திமுக எம்பி யாக இருக்கிற நவாஸ் கனி, திமுக எம்எல்ஏ அப்துல் அனைவரும் இணைந்து நாங்கள் மலையின் மேல் ஆடு கோழி வெட்ட செல்கிறோம் என்று கூறினார். இந்துக்கள் கோவில்களில் ஆடு கோழி பலியிடும் வழக்கம் உண்டு. ஆனால் இது முருகன் கோவில்களில் அந்த வழக்கம் கிடையாது. மலையின் கீழ் முருகன் கோவிலும் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் அமைந்துள்ளது. அங்கு வாழும் ஒரு 80 வயது உள்ள மூதாட்டி கூறுகிறார், நான் பார்த்த வரைக்கும் மலை உச்சியில் எப்பொழுதும் பலிகள் நடந்ததில்லை என்று கூறுகிறார். இப்படி இருக்கையில் அங்கு தான் சென்று கோழி ஆடு வெட்டக்கூடாது. வெளியில் வெட்டி சமைத்துக் கொண்டு வந்து அங்கு உட்கார்ந்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள். அதற்குத்தான் நான் கூறுகிறேன் பாண்டி கோவிலுக்கு வா.. நாங்கள் போடுகிறோம் உங்களுக்கு பிரியாணி… ஆனால் இங்கு அதை செய்யக்கூடாது.. ஆடு கோழி மற்ற கோவில்களில் பலி கொடுக்கும் இந்துக்கள் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் இந்துக்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் பிரியாணியை எடுத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு சென்ற கூட்டம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதற்காகவே சென்ற கூட்டம் தான் அது என்றார்.. தொடர்ந்து பேசியவர் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் தான்,. முருகனை தமிழ் கடவுள் என்று கூறி நீங்கள் ஒரு மாநாடே போட்டீர்கள்… சனாதனத்தை டெங்கு மலேரியா கொசுவை போன்று கொள்வேன் என்று கூறிய உதயநிதியை மாநாட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தீர்கள்… அதற்குத்தான் நான் கூறுகிறேன் முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும், இந்துக்களுடைய வழிபாட்டு தலங்களை ஆக்கிரமிப்பதால் , வக்பு சட்டமாக அமல் ஆகி இருக்கிறது.. நான் உங்களிடம் கேட்கிறேன் இந்தியாவில் ஏதாவது ஒரு மசூதியை கிடைத்து அதன் மேல் கோவில் கட்டப்பட்டுள்ளதா? எங்கேயாவது ஒரு சர்ச்சை இடித்து கோவில் கட்டப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? , ஆனால் நான் கோவிலை இடித்து மசூதி கட்டியது சர்ச் கட்டியதை தான் கூறுகிறேன், இந்த தர்மம் மாத்திரமே வழிபாட்டால் வேறுபாடு காட்டாத ஒரே பண்பாடு கலாச்சாரம் கொண்டது, அதனால் இந்த அல்லேலூயா பாபு எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்.. திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் என்னிடம் கூறுகிறார்கள், x அதிமுக தான் தற்போதைய திமுகவை ஆட்சி செய்கிறது என்று.. உண்மையான திமுக தொண்டர்கள் தெரிய தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டும் என்று அவர்களை பேச தொடங்கி இருக்கின்றனர் என்று கூறினார்.
1931 பிரிவியூ கவுன்சிலுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட மேம்பாட்டு பணிகள் நீக்கப்பட வேண்டும், ஏனென்றால் அதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்துக்களுக்கு தல விருட்சம் என்பது மிகவும் புனிதமானது. எல்லா கோவில்களிலும் ஸ்தல விருட்சத்திற்கு பூஜை செய்கிறோம்.. அதேபோல திருப்பரங்குன்றத்தின் தலவிருட்சம் கள்ளத்தி மரம், ஆனால் அதில் நீங்கள் பிறை கொடி கட்டி இருக்கிறீர்கள்.. அதேபோல நீதிமன்ற 1994 நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது, 2020 நீதிமன்ற தீர்ப்பில், முன்னருயேற்றப்பட்ட இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆடு கோழி வெட்டி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தக் கூடாது கூற வேண்டும் , உங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களை முருக பக்தர்களை துன்புறுத்துவீர்களா?, நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை முதலில் நடைமுறைப்படுத்துங்கள்..முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எட்டு சீட்டுகளை டெல்லியில் பாரதிய ஜனதா வென்று இருக்கிறது. டெல்லியில் கெஜ்ரிவால் தோற்றுவிட்டார் என்ற நல்ல செய்தியோடு விடைபெறுகிறேன் என்று கூறினார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகர் சிலை மருதமலையில் அமைக்க போகிறோம் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு,
மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன், அந்த முருகனை தரிசிக்க இந்த ராஜா வர முருகன் அருள் புரியட்டும் என்று கூறினார்.




