
பேரழகனே..,
உனது நேசம் கண்டு
என் மனத்தோட்டத்தில்
புதிதாக செடி ஒன்று தளிர் விட்டு மொட்டு விட்டு பூக்களாக பூத்து குலுங்கின்றன….
அத் தோட்டத்தில் நீயும் நானும் நித்தம்…
நித்தம் காதலால் அளவளாவி உலாவுகின்றோம்.,..
உன் பேச்சு என்னை சிறைபிடிக்கும்
மந்திரமடா…
உன் சிரிப்பு சித்தன்ன வாசல்
ஓவியமாக….
உன் நேசம் என் உயிரில் நீ
செய்யும் பாசனம்
மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை
என்னுயிரே….
இது கவிதையா என்றால் உன்னை பற்றி
நான் எது எழுதினாலும் அது கவிதை தானடா என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்
