• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

நிகழாத
பேரற்புதங்கள் உன்னை
நினைக்கையில்…

கமழாத
புது சுகந்தம் கமழ்கிறது உன்
புன்னகையில்

நித்திரையில் கனவாய் வந்து
சித்திரையிலும் மார்கழி குளிரை தர உன்னால் மட்டும் எப்படி முடிகிறது…

சாளரம் திறவாத அறையினில் தென்றலாய் புகுந்திடும் உன் நியாபகங்களின் ரகசியம் என்னவோ….

விரக்தியடைந்த மனதினில் கூட உன் நினைவெனும் மகிழ்மழை நனைத்து
யௌவனம் கொணர்கிறதே..

யாரது சொன்னார்கள் இயலாது என

உன் பேரன்பை பற்றி கூற கேட்டால் குருடனும்
பார்வை பெற்று உனை காண விழைவான்……
என் பேரழகனே

This image has an empty alt attribute; its file name is WhatsApp-Image-2024-02-25-at-1.15.53-PM-6.jpeg

கவிஞர் மேகலைமணியன்