கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் உன்மத்த வாராகி சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.
கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்மத்த வாராகி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று ஆலயம் அருகே பிரத்தியேக விழா பந்தலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கற்பக விநாயகர் மற்றும் உன்மத்த வாராகி அம்மனுக்கும், உன்மத்த பைரவர் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் அதிகாலை நடைபெற்று ,அதன் தொடர்ச்சியாக பைரவர் மற்றும் வாராகி ஸ்வாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது .
அதை தொடர்ந்து பிரத்தியேக விழா பந்தலில் உற்சவர் வாராகி அம்மனையும், பைரவரையும் சிறப்பு அலங்காரத்தில் கொலுவிருக்க செய்தனர்.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயம் அருகே உள்ள வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாப்பிள்ளை அழைப்புடன்
சீர்வரிசை தட்டுகளை சுமந்து வந்த பிறகு பிரத்தியேக விழா பந்தலில் கொண்டுவந்து சேர்த்தனர்.

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மற்றும் சிவ பக்தர்கள் வேத மந்திரம் கூறி பிரத்தியேக யாக வேள்வி நடத்தினர்.யாக வேள்வியை தொடர்ந்து யாக வேள்விக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் உற்சவர் உன்மத்த வாராகி அம்மனுக்கும், உன்மத்த பைரவருக்கும் கங்கணம் கட்டிய பிறகு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாலை மாற்றும் நிகழ்ச்சியுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் திருமாங்கல்யம் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மன் மற்றும் உன்மத்த பைரவர் சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் . அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய அர்ச்சகர் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.