• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்

Byகுமார்

Jul 5, 2022

மதுரையில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தனியார் நிறுவனத்தினர் ரத்ததானம் முகாம் நடத்தப்பட்டது
முன்னாள் முதல்வர் கருணாநிதி 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளாங்குடி மீனாட்சி நகரில் நிம்சி டிரேடிங் எக்ஸ்போர்ட் சார்பாக இன்று ரத்ததான முகாம் நடத்தப்பட்டது மதுரை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.


இந்த நிகழ்வில் கொடுக்கப்படும் ரத்தங்கள் அனைத்தும் மதுரைஅரசு மருத்துவமனைக்கு கொடுக்கப்பட உள்ளது இந்த நிகழ்வு ஏற்பாடு செய்த நிம்சி டிரேடிங் எக்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் கௌதம் சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் 22வது வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.