மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மேற்கே அமைந்துள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் உள்ள பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி சுற்றப்பட்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.,

முன்னதாக பரமசிவனுக்கு பால், தயிர்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து அபிஷேகம் செய்யப்பட்டு தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.,
இதில் கிராம பொதுமக்கள் திரளாக பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.








