• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- கர்நாடக போலீஸ்

Byகாயத்ரி

Nov 26, 2021

கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட சுமார் 16-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 2020, 2021-ம் ஆண்டுகளில் திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார், லாரி மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.


பல கோடி மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள், கார், லாரி, தங்க நகைகளை கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு இடங்களில் திருடு போயிருந்தது. திருடர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதை தற்போது மங்களூரு மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு காவல் நிலைய போலீசார் அதனை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மங்களூரில் உள்ள டவுன்ஹால் பகுதியில் நடைபெற்று வருகிறது .


மேலும் போலீசார், தீயணைப்பு துறையினர் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு செயல்களில் ஈடுபடுகின்றனர், எந்தெந்த கருவிகளை பயன்படுத்தி அவர்கள் ஈடுபடுகிறார்கள் பல்வேறு விதமான துப்பாக்கிகள் அந்த தீயணைப்பு துறையினர் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.