• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

“இஸ்ரோ” செல்லும் பழங்குடியின மாணவர்களுக்கு கப்பச்சி வினோத் வாழ்த்து……

இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் நாடு முழுவதுமிருந்து 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ‘அகஸ்தியர்’ என்ற பெயரில் செயற்கைக்கோள் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 82 மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் என 5 பழங்குடி மாணவ மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் செயற்கைக்கோள்கள் குறித்துக் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆன்லைன் மூலம் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரிலுள்ள இஸ்ரோ வளாகத்தில் நடைபெற உள்ள 4 நாள் சிறப்புப் பயிற்சி முகாமில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரோ பயணம் மேற்க்கொள்ளும் பழங்குடியின மாணவ மாணவிகள் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் தலைமை ஆசிரியர் தலைமையில் அ.தி.மு.க., நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கப்பச்சி வினோத் மாணவ மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.