சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் இணைந்துள்ளதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும் ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.
இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு முக்கிய நடிகர் இணைந்துள்ளதை அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ். ஆம், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.