தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில், வெள்ள நீரை வெளியேற்றும் பணியை ஆய்வு செய்தார். மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தார்.
