திமுக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அண்ணாவின் சிலையின் முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகராட்சி தலைவர், நகர திமுக செயலாளர் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தார்.

கலப்பை இயக்கத்தின் தலைவரும், தென்குமரி கல்விக்கழக செயலாளர் பி.டி.செல்வகுமார் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள். ஆட்லின், இக்பால், ராயப்பன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், நகர இளைஞரணி செயலாளர் சின்னமுட்டம் ஷ்யாம், நகர திமுக நிர்வாகிகள் நாகராஜன், பி.ஆனந்த், ரூபின், பிரைட்டன், அருண், வேலு மற்றும் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




