கன்னியாகுமரியில் இன்று மாலை (நவம்பர்_21) காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்வில்,

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி,
அவரது பேச்சில். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரியில் சீசன் தொடங்கிவிட்டது.
என்பார்கள். அதுபோல். இந்தியாவில் எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தால். தேர்தல் டூரிஸ்டாக மோடி வந்துவிடுவார்.
தமிழகத்தில் தேர்தல் வெகு விரைவில் நடக்கயிருப்பதால். பிரதமர் மோடி தமிழக தேர்தல் டூரிஸ்டாக வரத்தொடங்கியதின் அடையாளமை நேற்று கோவைக்கு வந்தவர். தமிழக மக்களுக்கான திட்டங்களை அறிவிக்காது.மதுரை,கோவை மெட்ரோ திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்திருப்பதை எடப்பாடி எந்த கருத்துமே தெரிவிக்காதது ஏன்.

மோடியை தேர்தல் டூரிஸ்ட் என்றவர் அடுத்து சொன்னது. கோவைக்கு வந்த பிரதமர் எனக்கு தமிழ் கற்க ஆசை என்பவர் நினைத்திருந்தால். இத்தனை காலத்தில்
பிரதமர் மோடி தமிழ் கற்று புலவராகியிருக்காலம் என அவரது பேச்சில் வெளிப்படுத்தினார்.
நிகழ்வில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ் நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்,
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர்.









