சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் நிகழ்ச்சி காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காமராஜர் நற்பணி மன்றத்தின் தலைவர் அன்பு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் 500க்கும் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி பேக் வழங்கப்பட்டது மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தங்களை நோக்கி ஒரு பெரிய அரசியல் கட்சி வரவேண்டும் எனவும், தற்போது தமிழ்நாட்டின் நிலை வரும் நான்கு முனை போட்டி பற்றி கருத்துகளை அவரிடம் கேட்டபோது,
இப்போதைக்கு யார் யாரிடம் கூட்டணி வைக்கிறார்கள் புதிய வரவுகள் யார் என்ற தெரியவில்லை. திமுக தலைமையில் ஒரு கூட்டணி உள்ளது.அதிமுக பாஜக இணைந்து ஒரு கூட்டணி உள்ளது.அந்த கட்சியின் கூட்டணி தொடருமா அல்லது தொடராதா என்பதை அறிவிக்க அந்த கட்சியின் தலைவர் எடப்பாடிவிடம் உரிமை உள்ளது. அவர் பிஜேபி எங்களிடம் கூட்டணி வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்ற கருத்தை கொண்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.மீதம் இருக்கும் நாம் தமிழர் கட்சி நாங்கள் தனித்து தான் போட்டியிடப் போகிறோம் என கூறிவிட்டார்கள்.விஜய் அவர்கள் அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் கட்சியிடம் தான் நாங்கள் கூட்டணி வைப்போம் என கூறிவிட்டார்.

தற்போது ஆட்சி செய்கிற திமுக தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடையும் நாங்கள் செல்கிற இடங்களில் எல்லாம் அப்படிப்பட்ட பிரதிபலிப்புதான் தமிழ்நாடு மக்களிடம் தெரிகிறது.ஒரு வேலை அரசியலில் வேண்டுமானாலும் மாறலாம் கடைசி நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாற்றம் அடைந்தால் அப்போதுதான் கருத்துக்கணிப்புகள் கணிக்க முடியும். திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் பாசிச பாஜகவை எதிர்க்கும் கூடிய கட்சிகள் தான் திமுகவில் கூட்டணியாக உள்ளது.எனவே இந்த கூட்டணி தற்போது பிளவுபடுமா யாரிடம் செல்லுமா என்பதை தற்போது சொல்ல முடியாது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் சிதம்பரத்தில் கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி தலைவர்களும் மற்றும் நாங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசிவிட்டு வந்தோம்.நம் அனைவரும் இணைந்து தான் இந்த தேர்தலை சந்திக்க போகிறோம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை பற்றிய கேள்விக்கு
இது போன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் அங்கொன்று இங்கொன்று நடந்து கொண்டே இருக்கிறது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. அதனால் போதை மாவ கஞ்சா கொக்கின் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். ராப்பறி,வழிப்பறி நடக்கக்கூடாது போன்றவை நடக்க கூடாது.காவல் நிலையம் மரணங்கள்,விசாரணை கைதி மரணங்கள், லாக் அப்டெத் மரணங்கள் நடக்கவே கூடாது. இதையெல்லாம் தமிழக முதலமைச்சர் இரும்பு கரங்களைக் கொண்டு அடக்க வேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கையை.
திமுக கட்சியில் கூட்டணியில் இருக்கின்ற விசிக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடிக்கம்பம் நடுவதில் தொடர்ச்சியான பிரச்சனைகளாக உள்ளது என்ற கேள்விக்கு
அரசு இயந்திரம் வருவாய்த்துறை,காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அங்கங்க கூட்டம் போடும் போது போடுகின்ற பிரச்சனைகளுக்கும் ஒரு கருத்தியலாக மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தி என்ற சக்திகளை வீழ்த்த வேண்டும் கொள்கைளவில் சித்தாந்தளவில் கருத்து அளவில் ஏற்பட்டிருக்கின்ற இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் மாறுபட்ட பிரச்சனைகளுக்கோ சிறு அளவில் கூட கூட்டணி கீரல் வரவாய்ப்புகள் இல்லை.இந்த மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை குறித்து பாதிப்பு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் போராட வேண்டும் பேச வேண்டிய ஒரு அரசியல் கட்சிகளாக இருக்கின்றோம்.
சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்பது எங்களது கடமை.அதே நேரத்தில் வாக்க அரசியலை, தேர்தல் அரசியலில்,கூட்டணி அரசியலில் இங்கு மனிதர்களை சாதியின் பேராலோ மதத்தின் பேராலோ எப்படி தமிழ் சமூகத்தின் உரிமைகள் பறிபோகும் என்பதின் உதாரணம் தான் கடந்த ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருக்கின்ற யார் வேண்டுமானாலும் டிஎன்பிசி தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று கொள்ளலாம் என்பது ஒரு உதாரணம். இதுபோல பல சட்டங்கள் தமிழர் மீது பாயும். இன்று எப்படி திருவண்ணாமலையில் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தெலுங்கு இருக்கிறதோ?.. எப்படி தமிழில் அத்தனை செய்யப்படும் எனும் வாசகம் திண்டலும் கேலியும் செய்யப்படுகின்றன.
இது ரைட் செயலாக சமஸ்கிருத ஆட்சியாக இருக்கும். வட இந்தியர்கள் தமிழக அரசு அதிகாரிகளாக இருப்பார்கள், தமிழர்கள் நிரந்தர அற்ற மக்களாக இருப்பார்கள் இருப்பார்கள் ஒருவேளை பிஜேபி ஆட்சி அமைந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலைதான் இருக்கும். உங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கிறது முரண்பாடு இருக்கிறது பிரச்சனைகள் இருக்கிறது அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சி இங்கு காலூன்ற கூடாது என்கிற சில மனக்கசப்புடன் திமுகவில்,விசிக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,என்னை போன்றவர்களும் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
திமுக தொடர்ச்சியாக பாஜகவை துரோகம் செய்கிறது என கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் த வெ க தலைவர் விஜய் இந்த லாக் ஆப் டெத் போராட்டத்தில் பாஜகவின் ஆர் எஸ் எஸ் கைகூலியாக ஆக இருக்கக்கூடிய சி பி ஐ பின்னால் திமுக சென்று ஒளிந்து கொண்டு உள்ளது என கேட்ட கேள்விக்கு
ஆளுகின்ற அரசு மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இதில் தமிழக காவல்துறை தான் அடித்து கொலை செய்து இருக்கிறார்கள். விசாரணைக்கு அழைத்துச் சென்று அதனால் இவர்களுக்கு நீதி கிடைக்காது.அதை காவல்துறையை வைத்து விசாரிப்பதை விட சிபிஐ விசாரணை வேண்டும் என முதல் நாள் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றை அறிக்கை கொடுத்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் வலியுறுத்தினார். எங்களுக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை இந்த குற்றத்தை செய்ததற்கு காவல்துறையில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் கண்டிப்பான முறையில் தண்டிக்கப்பட வேண்டுமென ஒரு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டி எஸ் பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கே இருக்கக்கூடிய காவலர்கள் 5 கைது செய்து சிறையடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையே அடித்து கொலை செய்து விட்டு காவல் துறையே விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் தான் ஆகவே தான் மத்தியபுலனாய்வு பிரிவு விசாரணைக்கு போடப்பட்டுள்ளது. முதல்வர் அவர்கள் அஜித்தின் குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டிய நீதி ஆக நடுநிலையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
அஜித்தின் குடும்பத்திற்கு முதல் முதலாக ஆறுதல் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கிய கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறைக்கு நாங்கள் ஏற்கனவே தன்னை வாங்கி கொடுத்திருக்கிறோம் இதிலும் வாங்கி கொடுப்போம் நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம் என்று கூறிய கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி லாக்கப் மரணம் நடந்தால் சட்டத்தின் முன்னிறுத்தி தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் அதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் அதற்கும் கூட்டணிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.













; ?>)
; ?>)
; ?>)