• Sat. Oct 5th, 2024

கமல்ஹாசன் விருப்பத்துக்குரிய நடன கலைஞர் பிர்ஜு காலமானார்

பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்புகாரணமாக நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 83.

பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ட்ரம்ஸ், தபாலா உள்ளிட்ட வாத்திய கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான ‘உன்னை காணாத’ பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *