சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் மற்றும் திரைப்பட தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது,
“வெற்றி பெற்றவர்கள் தான் அந்த வெற்றியின் நேர்மையை பரிசீலிக்க வேண்டும். அவர்களுக்கு வெற்றி சந்தோஷமாக இருக்கலாம்; ஆனால் அதில் நமக்கும் சந்தோஷம் இருக்கிறதா என்று நாம் ஆராய வேண்டும்,” என்றார்.
எஸ்.ஐ.ஆர். அமைப்பை பொருத்தவரை,
“அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்,” என்று கூறினார்.
புதிய திரைப்படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதைக் குறித்து கேட்கப்பட்டபோது, “இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது அவருடைய முடிவு,” என்று தெளிவுபடுத்தினார்.

தயாரிப்பாளராக எந்த கதையைத் தேர்வு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“நான் முதலீட்டாளர். என் நடிகருக்கு பிடித்த கதையை எடுத்தால் அதுவே எனக்கு ஆரோக்கியம். ரஜினிக்கு பிடித்த இயக்குநர்களிடமும் நான் கதை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். புதியவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது,” எனக் கூறினார்.
“எந்த வகை கதையை எதிர்பார்க்கிறீர்கள்?” என கேட்டபோது,
“எதிர்பாராததை எதிர்பார்க்கிறோம்,” என்று சொல்லி அவர் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.






; ?>)
; ?>)
; ?>)
