• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கள்ளக்குறிச்சி வன்முறை – 192 பேர் கைது

ByA.Tamilselvan

Jul 18, 2022

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 192 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். அதன்பின், பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.
இதைத் தொடர்ந்து, அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலவரத்தில் தொடர்புடைய 192 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.