சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத களப பூஜை, இவ்வாண்டு இன்று ஜூலை 18 முதல் 30 வரை நடைபெறுகிறது.

தினமும் காலை 10 மணிக்கு உச்சகால அபிஷேகம், பின்னர் தங்க குடங்களில் களப அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர், கோரோசனை மற்றும் குங்குமப்பூ கலந்த களபம் அர்ப்பணிக்கப்படும்.
இந்த பூஜை தெற்கு மண்மடம் தந்திரி தலைமையில் நடைபெறுகிறது. 13-ம் நாளான 30-ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா நிறைவடைகிறது.