மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது 1500 பழமை வாய்ந்த கைலாசநாதர் – பெரியநாயகி அம்மன் திருக்கோவில்., திருவண்ணாமலைக்கு நிகராக தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோவில் அருகில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள திடியன் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.,

இந்த ஆண்டும் இன்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த திடியன் மலை உச்சியில் 101 அடி நீள திரியில், 100 கிலோ நெய் மூலம் தயார் செய்யப்பட்டிருந்த கொப்பரையில் மகா தீபம் வெகுவிமர்சையாக ஏற்றப்பட்டது.,
முன்னதாக மலை உச்சியில் உள்ள தங்கமலைராமன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது., தென்னாடுடைய சிவனே போற்றி, கோவிந்தா, கோவிந்தா கோசங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் மலை ஏறி தீப தரிசனம் செய்தனர்., தொடர்ந்து வான வேடிக்கை வெடிக்கப்பட்டது.,








