விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், சிவந்திபட்டி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு: அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு சிவந்தி பட்டி இந்து நாடார் கபாடி கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தேவதானம், தளவாய்புரம், சேத்தூர், மம்சாபுரம், சிவந்திபட்டி, மல்லி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கபடி குழுவினர் போட்டியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து வெற்றி வாகை சூடிய அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கி அவர் பேசியது
அதிமுக முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா இளைஞர்களின் விளையாட்டுத் தன்மை ஊக்குவிப்பதற்காக இளைஞர் நலன் விளையாட்டு துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள், வீரர்களுக்கு ஊக்க தொகைகள் வழங்கினார் அதனை பயன்படுத்தி விளையாட்டு வீரர்கள் மாவட்டம் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் நிகழ்த்தினார்கள்.
அம்மா வழியில் ஆட்சி செய்த எடப்பாடியாரும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகள் செய்தார்.
தற்போது உடல் உழைப்பு குறைந்து வருகிறது ஆகையால் படிக்கும் பருவத்தில் ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொண்டு உடல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சிவந்திபட்டி நாடார் கபடி கழகம் சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.