விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அருள்மிகு: ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது.
இக்கோவிலில் வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 12ஆம் தேதி வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது .

அதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் கோவில் கமிட்டியினர் அழைப்பிதழ் கொடுத்தனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு நேரில் வருகை தருவதாக உறுதி அளித்தார். மேலும் நிகழ்ச்சிகள் சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டு கமிட்டியினருக்கு நிதி வழங்கினார். முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜிக்கு கோவில் கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.







