விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் விருதுநகர் கை வண்டி,மாட்டு வண்டி,லாரி சுமை ஏற்றுமதி,இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ள சங்க 53 வது ஆண்டு விழாவும்,மே தினம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுகவின் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை இல்லத்தில் சந்தித்தனர். சந்திப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூபாய் 50 ஆயிரத்தை சுமை தூக்குவோர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிச்சைக்கனியிடம் நிதி யாக வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது சுமை தூக்குவோர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் நாகசுந்தர கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.