• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்..,

ByT. Vinoth Narayanan

Apr 20, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லத்துப்பிள்ளைமார் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.

கண் சிகிச்சை முகாமை இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் தலைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரமான அங்குராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கார்த்திக், துணைச் செயலாளர் சக்தி மோகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாதவன் முகாமை துவக்கி வைத்தார்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமணை டாக்டர்கள் ஹர்ஷினி, நிவேதிதா தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். 250கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் 30 பேர்கள் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தார்.