விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் , பிற கட்சி இளைஞர்கள் என ஏராளமானோர் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் வள்ளலார் நகர் பகுதியை சார்ந்த எந்த கட்சியையும் சாராத பட்டதாரி இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என சுமார் 50ற்கும் மேற்பட்டோர் திருத்தங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.அதிமுகவில் இணைந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.








