நீலகிரி மாவட்ட புதிய காவல்ததுறை கண்காணிப்பாளராக கே.பிரபாகரன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நீலகரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஆசிஸ் ராவத் பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசு காவல்துறை கண்காணிப்பாளர்களை விட மாற்றி உத்தரவிட்டுள்ளது.அந்தவகையில் நீலகிரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர் கே. பிரபாகரன் உதகையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர் இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூடுதலாக போக்குவரத்திற்கு தனி கவனம் செலுத்தப்படும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீதும், அதற்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகள் யாராயினும் அவர்கள் மீது கடுமையான நடவடிககை எடுக்கப்படும் எனவும், தமிழக முதலமைச்சர் போதையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் போதை இல்லா நீலகிரியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.