• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைத்த ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் அடுத்தகட்ட விசாரணை குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக சம்மன் அனுப்புவது மற்றும் எவ்வாறு விசாரணை நடத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை எழிலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அப்போலோ வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ 8 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என இதுவரை 154 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது