தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சிக்கு ஜேபி நட்டா வந்தடைந்தார். இன்று ஒரே நாளில் 4 தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் என்ற தகவல்களை பாஜகவினர் தெரிவித்து இருக்கின்றனர். சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பொதுக்கூட்டம், கரூர் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து, விருதுநகரில் நடிகை ராதிகாவுக்கும், திருச்சியில் அமமுகவின் செந்தில் நாதனுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறார்.