• Wed. May 1st, 2024

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுபாலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேச்சிபாறையில் திறந்த வாகனத்தில் தொடங்கிய வாக்கு சேகரிப்பு பணி திருநந்திக்கரை, திற்பரப்பு, திருவரம்பு, குலசேகரம் சந்தை, அரசுமூடு, மாமூடு, வெண்டலிகோடு, குலசேகரம் சந்தை, மலவிளை, குமரன்குடி, வேர்கிளம்பியில், சித்திரங்கோடு, முதலார், திருவட்டார், சுவாமியார்மடம், இரவிபுதூர்கடை, செறுகோல், வீயன்னூர், ஆற்றூர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கல்லு பாலத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

கொரோனா காலகட்டத்தில் எனது தந்தை எவ்வாறு மரணம் அடைந்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வதற்கு ஒரு வாய்ப்பினை கேட்டேன் நீங்களும் என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள், அதற்கான நன்றிக்கடன் உடன் இருப்பேன், இரண்டரை ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தேன், மீண்டும் ஒரு வாய்ப்பினை தாருங்கள் என உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன். மத்தியில் பாஜக ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது, அவர்கள் பல இன்னல்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன், முடங்கிப் போன நான்குவழி சாலை திட்டத்தை கொண்டு வந்துள்ளேன், மந்தமாக நடந்து கொண்டிருந்த ரெட்டை ரயில் பாதை திட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, ரயில்வே நிலையங்கள் தரம் உயர்த்தும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, விரைவில் நான்கு வழிச்சாலை திட்டமும், இரட்டை ரயில் பாதை திட்டமும் முடிந்துவிடும். அதற்காக மீண்டும் ஒரு தடவை வாய்ப்பினை கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் நான் பொய் பிரச்சாரம் செய்வதாக கூறி வருகிறார் . அப்படி என்றால் நீங்கள் செய்த திட்டம் என்ன என நான் கேட்கிறேன், 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரும் என கூறினார்கள், உங்களுக்கு யாருக்காவது பணம் வந்து உள்ளதா, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள், கச்சா எண்ணெயின் விலை குறைவாக இருந்தாலும் பெட்ரோல் டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது, தேர்தல் வந்துவிட்டால் ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் குறைத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறது. தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றி விடுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொண்டிருக்கிறோம், நாம் ஒன்றாக இருப்போம் நம்மை யாரும் பிரிக்க முடியாது, மணிப்பூரில் நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் நமக்குத் தெரியும், ஆனால் பிரதமர் அங்கு சென்று பார்க்கவில்லை, பிரதமர் பாலம் திறக்க செல்கிறார், விமான நிலையம் தி றக்க செல்லுகிறார். அம்பானியின் வீட்டு திருமணத்திற்கு செல்கிறார். ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லவில்லை, இதனால் அவர்கள் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்வதில்லை , எனவே பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது, பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுக் கொடுப்பேன் என கூறி ஜூலை போராட்டம் நடத்தினார்கள், இன்று கல்வி உதவித் தொகை பெற்று கொடுத்தார்களா, ஜூலை போராட்டம் என்ன ஆனது, அவர்களது ஆட்சி தான் இருக்கிறது. ஒரு மனுவாது கொடுத்தாரா ஓட்டுக்காக , தேர்தல் நேரத்தில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும். இது தான் அவர்களது நோக்கம், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கன்னியாகுமரியில் ஏற்படும் மாற்றம் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், இந்தியா கூட்டணி அரசு பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய், வேலையில்லா, படித்த பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது, எனவே எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பரப்புரையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ்கட்சி சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார், பத்மநாபபுரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ரேமோன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் வினுட் ராய், ஜெபா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வழி நெடுக்கிலும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தை மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *