• Thu. May 2nd, 2024

மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்

மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது
குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சிகள், சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் மஞ்சூர் அப்பாஸ் உள் அரங்கில் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் D. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாவட்ட இளைஞர் அணி துனை அமைப்பாளர் TKS பாபு, பேரூராட்சி தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், அஇஅதிமுக ஒன்றிய கழக செயலாளர் RS.வசந்தராஜன், கோபால், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் கீழ்குந்தா ஆனந்த்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி குந்தா ஒன்றிய செயலாளர்,AITUC மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் தோழர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலளர் தோழர் அலியார், பாஜக குந்தா மண்டல பொருளாளர் சுரேஷ் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொருளாளர் தம்பிநூரான்அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கீழ்குந்தா பேரூர்கழக செயலாளர் க.மணியரசன்,மஞ்சூர் அனைத்துகடைக்காரர்கள் சங்க தலைவர் M. சிவராஜ், செயலாளர் பாரூக், மஞ்சூர் சிறுவணிகர்கள் சங்க செயலாளர் P. விஜயகுமார்மஞ்சூர்ஜீப் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரை, குந்தா ரோட்டரி சங்க நிர்வாகி சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில்

1.மஞ்சூர் அரசு தலைமை மருத்துவமணையில் 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறு மருத்துவர்களை உடனடியாக நியமிக்கவேண்டும் என வேண்டி வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டது

  1. தற்ப்போது உள்ள மருத்துவர்கள் மருத்துவமணைக்கு செல்லும் நோயாளிகளை அலட்சியப்படுத்துவதும், உள் நோயாளிகள் வெளிநோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்காமல் அலைக்கழிப்பதும்பொதுமக்களிடையே விரக்தியை ஏற்ப்படுத்தி உள்ளது. கடவுளுக்கு இணையான மருத்துவர்கள் இப்படி கண்ணியக்குறைவாக நடந்துகொள்வது வேதனைக்குறியது… இவ்விதமாக தொடர்ந்து செயல்படும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்க எடுத்திட மாவட்ட துறைத்தலைவர்,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர், மாண்புமிகு அமைச்சர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
  2. மருத்துவமனையில் எக்ஸ்ரே, ECG, SCAN,்ஆக்சிஜன் உற்பத்தி, மற்றும் அத்தியாவசிய வசதிகள்,செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டி தீர்மானிக்கப்பட்டது4.கடந்த மாதம் 14/12/2022 ம் தேதி கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள் நோயாளியை சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது மழையில் மேற்கூரை ஒழுகிய நிலையில் அதனை சரி்செய்திட மேல்நடவடிக்கைக்கு புகைப்படம் எடுத்திட்ட கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது பணி செய்யவிடாமல் தடுத்ததாக மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை கொச்சைப்படுத்தி வழக்கு தொடுத்த அரசு மருத்துவஅதிகாரியின் கண்ணியமற்ற செயலை இந்த கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டிக்கறது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்மக்களாட்சி தத்துவத்தை காக்கும் வகையில் அவ்வழக்கினை ரத்து செய்ய வேண்டி கூட்டு நடவடிக்கை குழுகூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.5. மஞ்சூர் அரசு மருத்தவமணையில் உள்நோயாளிகளுக்கு மருத்துவமணையிலேயே சுகாதாரமான உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திவேண்டி தீர்மானிக்கப்பட்டது
    19/03/2023 கொட்ரக்கண்டி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நோயாளி நடராஜன் என்பவரை மருத்துவர் பரிந்துரையின்படி இருதய அடைப்பு உறுதி செய்து மேல் சிகிச்சை ECG, loading dose ,உடனே வழங்கிட அரசு மருத்துவமனை மருத்துவருக்கு பரிந்துரை கடிதம் எழுதிகொடுத்தும்… நோயாளியை அரசு மருத்துவமனையல் 30 நிமிடங்கள் வரை காக்க வைக்கப்பட்டு மருத்துவர் சிகிச்சையளிக்காமல் ஆதரவற்ற அவர் மருத்துவர் ஆதரவில்லாமல் உயிர் இழந்த சோகம் பொதுமக்களிடம் தீராத துயரத்தை ஏற்ப்படுத்தி உள்ளது, தொடர்ந்து இப்படியான அசாதாரன நிகழ்வுகள் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் ஏற்ப்படுவதை இனி ஒருபோதும் அனுமதிக்காமல் மேற்கண்ட துக்கநிகழ்வினை கண்டிப்பதுடன் தொடர்ந்து இப்படியான சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டி தீர்மானிக்கப்பட்டது.மேற்க்கண்ட தீர்மானங்களை நிவேற்றிட மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,நாடாளுமன்ற உறுப்பினர், மாண்புமிகு அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து தீர்மானங்களை நிறைவேற்றிட வலியுறித்தி சகாதாரமான நம்பிக்கையுள்ள மஞ்சூர் அரசு மருத்துவணையை உருவாக்கிட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *