• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

ByP.Kavitha Kumar

Jan 31, 2025

ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 22-ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 60,200 ரூபாய்க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை சவரன் ரூ.60ஆயிரத்துக்கு கீழ் இறங்கவில்லை. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று முன்தினம் புதிய உச்சமாக சவரனுக்கு 60,760 ரூபாய்க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,730 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 61,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.