• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஜூவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா

BySeenu

Nov 9, 2025

கோவை ஆர்.எஸ் புரம், டி.வி சாமி ரோட்டில், எமரால்டு குரூப் சார்பில் ஜூவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.இந்த ஷோரூமில் வைர நகைகளுக்காக, புளோரன்சியா என்ற பெயரிலும்,பிரிமியம் சில்வர் நகைகளுக்காக ஜிலாரியா என்ற பெயரிலும் பிரத்யோக பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள பாரம்பரிய மிக்க நகை மாடல்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமண முகூர்த்தம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளில் மணப்பெண்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜூவல் ஒன் நகைகள் உள்ளது. பிரிமியம் சில்வர் மற்றும் வெட்டிங் ஜூவல்லரிக்கு 10 சதவீத தள்ளுபடி, எவரிடே நேச்சுரல் டைமண்ட் ஜூவல்லரிக்கு ஒரு காரட்டுக்கு 15,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

இது குறித்து எமரால்டு குரூப் இயக்குனர் தியான்ஷக்தி சீனிவாசன் கூறியதாவது:-

இந்தியாவில் ஜெய்ப்பூர், கல்கத்தா,மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பயன்படுத்தும் நகை மாடல்களை தேர்வு செய்து எங்களது பேக்டரியில் பிரத்யேகமாக தயார் செய்யப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருப்பதால், எல்லோராலும் தங்க நகைகைள் எளிதில் வாங்க முடியாது.எனவே குறைந்த விலையில் அனைவராலும் வாங்க கூடிய அளவுக்கு நவ நாகரிகமாக தயாரிக்கப்பட்ட சில்வர் ஜூவல்லரி மற்றும் டைமண்ட் ஜூவல்லரி விற்பனை செய்கிறோம்.

சில்வர் மற்றும் டைமண்ட் ஜூவல்லரி குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். பெண்கள் விரும்பும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடல்கள் விற்பனைக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் இந்த விழாவில் வணிக பிரிவு தலைவர் அந்தோணி மற்றும் அல்போன்ஸ் கலந்துகொண்டனர்.