இயக்குநர்எம் ராஜேஷ் இயக்கும் படங்களுக்கு இசையமைத்து வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல், வனமகன் ஆகிய படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடைசியாக 2019-ல் காப்பான் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து துருவ நட்சத்திரம் மற்றும் லெஜன்ட் சரவணா நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இந்த நிலையில் ஜெயம் ரவி – எம் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மீண்டும் இந்த இருவருடனும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கூட்டணி அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஜெயம் ரவி-ராஜேஷ்-ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணையும் புதிய படம்
