• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம்

ByKalamegam Viswanathan

Feb 25, 2023

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் 100 க்கும் மேற்பட்ட அதிமுக நகர செயலாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினா்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் விழா அதிமுக நகர செயலாளர்கள் முருகேசன் பரமசிவம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா திருவுருவ படம் தாங்கிய வாகனம் முன் செல்ல, அதன் பின்னர் பட்டாசு வெடித்தபடி மகளிரணியினர், நகர, ஒன்றிய நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.பழைய பேருந்து நிலையம் எதிரே இருந்து தொடங்கிய பேரணி, தென்காசி சாலை, காந்தி சிலை, தெற்கு காவல் நிலையம், காந்தி கலை மன்றம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து சத்திரப்பட்டி சாலையில் உள்ள அம்மா உணவகம் முன்பாக நிறைவடைந்தது.அங்கு அமைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் யோகேசகரன் திருப்பதி செல்வராஜ் வனராஜ் அழகாபுரியான் ஆந்திரா குமார் வெள்ளத்துரை செல்லப்பாண்டியன் மற்றும் அழகுராணி ராணி லீலா துரைச்சி மற்றும் நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் மகளீரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.