• Wed. Mar 19th, 2025

ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா.

ByI.Sekar

Feb 25, 2024

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே 4 வது வார்டு கவுன்சிலர் மலர்விழி பொன்முருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அன்னதானம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சியை கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்குடை ராமர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலாளர் கரிகாலன் ,மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, திரைப்பட நடிகர் வெள்ளை பாண்டி ,மகளிர் அணி கொடியம்மாள், முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் வைகை சாலை பாப்பம்மாள்புரத்தில் 3 வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கி நிகழ்ச்சியிணை துவக்கி வைத்தார். இதில் நகர அம்மா பேரவை பொருளாளர் மாரிக்கண்ணன், இணைச் செயலாளர் பாலு ,வார்டு செயலாளர் இமயம் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் ரவிராஜ் ,செல்வம், சக்திவேல், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.