• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமார், திமுக மீது பாய்ச்சல்…

Byகாயத்ரி

Mar 12, 2022

சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு, சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு. தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன் என்று செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.