• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

1000 -கோடி ஊழலை பேச பாஜகவுக்கு தகுதி இல்லை…MLA ஜவாஹிருல்லா பேச்சு!

ByPrabhu Sekar

Mar 19, 2025

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மேற்கு தாம்பரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாநில துணை பொதுச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம்.யாக்கூப் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா கூறுகையில்:-

திருநெல்வேலி டவுன் பகுதியில் வசித்து வந்த காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் (எ) குஜிலிபாய் அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு இல்லத்திற்கு திரும்பி சென்றபோது மிக மோசமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வக்பு இடம் தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த பிரச்சனையின் காரணமாக ஜாகிர் உசேன் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த புகார் குறித்து அப்போது திருநெல்வேலி காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில் குமாரும், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மெத்தனமாக, அலட்சியமாக நடந்திருக்கிறார்கள்.
அந்த மெத்தனத்தின் காரணமாக ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் முதலமைச்சர் ஜாகிர் உசேன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண மட்டும் இன்றி அவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.காவல் துறைக்கு நற்பெயரை, ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்ட உதவி ஆணையர் செந்தில்குமாரையும், ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவர்கள் மீது உரிய விசாரணைகள் வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

முதலமைச்சர் வக்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கு பல்வேறு நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மிக வலிமையான குரல் முதலமைச்சரின் குரல் இருக்கின்றது.

அண்ணாமலைக்கும், பாஜவுக்கும் ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை, டாஸ்மாக்கை பற்றி பேசுவதற்கும் அவர்களுக்கு அருகதை இல்லை முதலில் அவர்கள் ஆளக்கூடிய மாநிலங்களில் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பின்னர் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யட்டும்.

டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்து மது கடைகளும் மூடப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து, விடுதலை சிறுத்தைகள் உடைய கருத்து.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு பாஜவுரக்கும், அண்ணாமலைக்கும் ஒரு துளி அளவு அருகதை கிடையாது.

ஒரு மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு இன்னொரு மாநிலத்தில் இன்னொரு நிலைப்பாட்டை ஒரு கட்சியை எடுத்துக் கொள்ள முடியாது.
பாஜ மற்ற மாநிலங்களில் மது கடைகளை மூடிவிட்டு தமிழ்நாட்டில் மூடட்டும் என சொல்லட்டும்.

ஆயிரம் கோடி இல்லை பல்லாயிரம் கணக்கான கோடி ஊழல்களை பாஜவினர் செய்திருக்கின்றார்கள். அனைத்தையும் மூடி மறுக்கின்றார்கள் ஏனென்றால் அவர்கள் வசம் அரசு இயந்திரம் இருக்கின்றது. அதேபோல ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை தங்கள் வசம் வைத்து அவர்களுடைய ஊழல்களை எல்லாம் மறைத்திருக்கிறார்கள். எனவே ஆயிரம் கோடி ஊழல் என சொல்வதற்கு கூட பாஜவினருக்கு தகுதி இல்லை.

சட்டம் ஒழுங்கை பேணுவதில் தனக்கு ஈடுபாடு இல்லை, அக்கறை இல்லை என்று சொல்லக்கூடிய அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் என்று தன்னை சொல்லி கொள்வது வெட்கக்கேடான செயல் என தெரிவித்தார்.