கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் சேவை மையம் நிறுவனர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை வகிக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், திரைப்படத் தணிக்கை மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஜனநாயகன் படம் அரசியல் காரணங்களுக்காக சென்சார் போர்டு நிறுத்தவில்லை என்றும் அதில் அரசியல் வாதிகள் போர்டு அதிகாரிகளாக இல்லை என குறிப்பிட்ட அவர் இதற்கு முன்னர் பல படங்களை சென்சார் போர்டு நிறுத்தியுள்ளது என்றார் ஜெயலலிதாவை பார்க்க கைகட்டி ரோட்டில் நின்றாரே அதெல்லாம் நடக்கவில்லையா ?

ஒருகாலத்தில் தமக்கு பிரச்சனை எழுந்ததாகவும், படம் வெளிவர வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், அது சட்டப்படி மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தற்போது தமிழ் சினிமாவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அவர் கூறினார்.‘Dude’ திரைப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்ததாகவும், ஆனவகொலை போன்ற சமூக பிரச்சினைகள் பேசப்படும் போது விமர்சனங்கள் வருவது இயல்பானது என்றும் சரத்குமார் தெரிவித்தார். சென்சார் வாரியம் தனது பணியை சரியாக செய்து வருவதாகவும், தாம் நடித்த ‘அடங்காதே’ படம் மற்றும் இயக்குநர் செல்வமணி இயக்கிய மற்றொரு படம் இன்னும் வெளிவராத நிலையிலும், அதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘பராசக்தி’ படத்திலும் சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே சென்சார் சான்றிதழ் கிடைத்ததாக அவர் நினைவூட்டினார்.அரசியல் குறித்து பேசும்போது, தற்போது தமக்கு நேரடியாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தான் பணி செய்வேன் என்றும் சரத்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள நிலையில், அதைப் பற்றி பேசாமல் ‘ஜனநாயகன்’ படம் குறித்து மட்டும் விவாதிப்பது வீண் என்றும், மக்கள் நல பிரச்சினைகள் குறித்து தான் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விமர்சனம் செய்பவர்கள் யோசித்துப் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.வரும் பொங்கல் பண்டிகைக்காக வெளியாகும் திரைப்படங்களை முதலில் பார்த்த பிறகே அவற்றை குறித்து தாம் கருத்து தெரிவிப்பேன் என்றும், நடிகர் விஜய் பாஜகவில் இணையவிருக்கிறாரா என்பது குறித்து தனக்குத் தகவல் இல்லை என்றும் சரத்குமார் விளக்கம் அளித்தார். இவ்வாறு நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.




