• Mon. Apr 28th, 2025

பங்குனி பொங்கல் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி…

ByP.Thangapandi

Apr 10, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

சுமார் 750 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களமாடும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்க்கப்பட்டு வருகின்றனர்.

திமிலுடன் திமிரி வரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்., போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கிராம கமிட்டியினர் சார்பில் பிரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கி வருகின்றனர்.

போட்டியை உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் துவக்கி வைக்க, உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் சுமார் 300க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ஆர்.பாண்டியன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் அரசியல் தலைவர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர்.