ட்ரான்ஸ் இந்தியா மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக ராஜன்&நீலா தயாரித்து ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
“ஜாலியோ ஜிம்கானா”.
இத்திரைப்படத்தில் பிரபுதேவா, அபிராமி, மடோனா செபாஸ்டின்,யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பவானி (மடோனா செபாஸ்டின்) தாத்தா ஒய்.ஜி.மகேந்திரன் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் கடையின் மெயின் ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணியினால் வியாபாரம் இல்லாமல் கடையை மூடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் மனம் உடைந்த தனது தாத்தாவை பார்த்த (மடோனா செபாஸ்டின்) பவானி தனது குடும்ப சொத்தை அடமானம் வைத்து தனது அம்மா (அபிராமி) மற்றும் தனது இரு தங்கைகளுடன் இணைந்து புதிதாக ஒரு பிரியாணி கடையை துவங்கினர்.
முதல் பெரிய பிரியாணி ஆர்டராக எம்.எல்.ஏவிடமிருந்து கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவை தாக்கி விடுகிறார்கள்.
பவானியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது பவானியின் தாத்தா தாத்தா, பவானியிடம் வழக்கறிஞர் பிரபுதேவா (பூங்குன்றனை) சந்தித்து பிரச்சனையை பற்றி பேச சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பவானி குடும்பமும் பிரபுதேவாவை (பூங்குன்றன்) சந்திக்க அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்கிறார்கள்.
ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பவானி குடும்பம் முயற்சிக்கிறது.
பிரச்சனையில் இருந்து விடுபட குடும்பமாக தேடி வந்த நபர் கொலை பழி இவர்கள் மீது விழுந்ததா? அதிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள்? பூங்குன்றன் ஏன் கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்ன என்பதை காமெடியுடன் சொல்லி இருப்பது தான் படத்தின் மீதி கதை!

படம் முழுவதும் சடலமாக நடித்து தனது அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார் பிரபுதேவா. படம் முழுவதும் லாஜிக் இல்லாமல் ஜாலியாக கதையை நகர்த்தி உள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். யோகி பாபுவின் காமெடி அந்த அளவுக்கு எடுபடவில்லை என்றாலும் ஓரிரு இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது.
ஜான் விஜய்,ரோபோ சங்கர், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர்கள் இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நடித்துள்ளார்கள். அபிராமியினுடைய நடிப்பு படத்திற்கு மெருகேற்றி உள்ளது. மடோனா நடிப்பு அருமை
பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக, பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் வரிகளில் போலீஸ்காரனா கட்டிக்கிட்டா பாடல் பார்வையாளர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. மொத்தத்தில் “ஜாலியோ ஜிம் கானா”ஜாலியாக பார்க்க வேண்டிய படம்.
