• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இது ஒரு புது அனுபவம்… செஸ் ஒலிம்பியாட் பற்றி விக்னேஷ் சிவன்!!

Byகாயத்ரி

Aug 10, 2022

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் ஆரவாரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இந்நிகழ்ச்சியை இயக்கியது குறித்து இயக்குனர் விக்னேஷ்சிவன் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. ஆகஸ்டு 8 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள விக்னேஷ் சிவன் “திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு என்பது திரைப்படங்களை விட வித்தியாசமானது. எனக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்கூட்டிய அனுபவங்கள் கிடையாது. இதுவே முதல்முறை. நல்ல டீம் இருந்ததால் சிறப்பாக செயல்பட முடிந்தது” என கூறியுள்ளார்.