

இணையத்தில் பரவும் போலியான திருப்பரங்குன்றத்தில் சமபந்தி விருந்து என யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர்.
கடந்த சில நாட்களாகவே மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையா அல்லது சிக்கந்தர் மலையா என பிரச்சனை மேல் பிரச்சனை எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது இணையதளத்தில் சில விசமிகள் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் மத ஒற்றுமையை காக்க சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லினத்திற்கான சமபந்தி விருந்து வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது என போலியாக தயாரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து இரு சமூகத்துடன் இரு தரப்பினிடம் கேட்ட பொழுது, இதுபோன்று அறிக்கைகள் நாங்கள் யாரும் வெளியிடவில்லை எனவும், நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் எனவும் இது யாரோ விஷமிகள் செய்யக்கூடிய வேலை என இது யாரும் பெரிது படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இது குறித்து காவல்துறையிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் எனவும், இது போன்ற விஷமத்தனமான வேலைகள் செய்வார்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இரு தரப்பின் கோரிக்கையாகவே உள்ளது. இது போன்ற போலியான செய்திகள் பரப்புவதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரையும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

