• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நடிகர் மகேஷ்பாபுவுக்கு இது துயர்மிகுந்த ஆண்டு

ByA.Tamilselvan

Nov 15, 2022

நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மரணத்தை தொடர்ந்து அவரது தந்தை மரணமடைந்ததால் இந்த ஆண்டு மிக துயர் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணாவும் டோலிவுட்டில் மூத்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கோலோச்சியவர் ஆவார் .கடந்த அவருக்கு லேசான மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மகேஷ்பாபுவின் தந்தை மரணமடைந்தார்.
இந்த ஆண்டு மகேஷ் பாபுவுக்கு மிகவும் சோகமான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஜனவரியில் அவரின் அண்ணன் ரமேஷ் மரணமடைந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது தாயார் இந்திராதேவி இறந்தார். இதுதவிர அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பி.ஏ.ராஜூவின் இழப்பும் மகேஷ் பாபுவுக்கு பேரிழப்பாக அமைந்தது.அதே போல அவரது தந்தையின் மரணமும் அவருக்கு இந்த ஆண்டு மிக துயர்மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.